படகு கவிழ்ந்த விபத்தில் 90 அகதிகள் உயிரிழந்துள்ளனர்.
லிபியா நாட்டில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு புகலிடம் தேடி 100க்கும் மேற்பட்டவர்கள் படகில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் படகு நடுகடலில் சென்று கொண்டிருந்த போது திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் தண்ணிரில் தத்தளித்து கொண்டிருந்த 4 பேரை பிரான்ஸ் நாட்டு சர்வதேச கடல் எல்லையில் எண்ணெய் கப்பல் மீட்டுள்ளது.
மேலும் மற்றவர்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் கூற்றுப்படி ஜனவரி 1 முதல் மார்ச் 28 வரை மத்திய தரைகடல் வழித்தடத்தில் சுமார் 300 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர்.