Categories
உலக செய்திகள்

“மத்திய கிழக்கு நாடுகள்” அமைதியை சீர்குலைக்கும் அமெரிக்கா…. ஈரான் கடும் சாடல்…!!!

மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை சீர்குலைப்பதற்கு அமெரிக்கா முயற்சிப்பதாக பிரபல நாடு குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்க நாட்டின் அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு 4 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதோடு அமெரிக்கா சீனாவை எதிர்ப்பதற்கான மத்திய கிழக்கு நாடுகளின் ஒருமைப்பாட்டை தற்போது உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஈரானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய கிழக்கு நாடுகளின் பயணம் மறைமுகமாக ஈரானை எச்சரிக்கும் விதத்தில் அமைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயணத்திற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதோடு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் தலைநகரில் கடும் போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் அணுசக்தி திட்டங்களுக்காக அமெரிக்கா, ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையை நீக்கியதால், சவுதி அரேபியா உடனான உறவு பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை விதித்தார். இப்போது அமெரிக்காவில் புதிதாக அதிபர் ஜோ பைடன் பதவி ஏற்ற பிறகு ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இது எல்லாம் அமெரிக்கா வெளியுறவு கொள்கையுடனான குழப்ப நிலைகளை மட்டுமே உணர்த்துவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஈரான் நாட்டின் செய்தி தொடர்பாளர் நசர் கனானி ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் ஈரான் மீதான பதற்றங்களை மட்டுமே அமெரிக்கா ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அது மட்டுமின்றி அமெரிக்கா முதலில் அணுகுண்டுவை பயன்படுத்திவிட்டு, தற்போது மற்ற நாடுகளின் அணுசக்தி விவகாரங்களில் தலையிட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் ஆயுத மோதல்களை தொடங்கியதோடு, ஆயுதங்களை பிராந்தியத்தில் விற்பனை செய்யவும் தொடங்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |