மாவட்டத்தில் மொத்தம் 98 இடங்களில் மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் மொத்தம் 98 இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் தேனியில் உள்ள திமுக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கியுள்ளார்.
இதனையடுத்து பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணகுமார், நகர பொறுப்பாளர் பாலமுருகன் மற்றும் பல நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் அல்லி நகரம், அன்னஞ்சியில், போடி, சண்முகசுந்தரபுரம், பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட 98 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.