மத்திய அரசு ஊழியர் என கூறி ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டு கொட்டகை பகுதியில் விவசாயியான வேல்முருகன்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு கொண்டிருந்தார். அப்போது பக்கத்தில் நிலத்தை சேர்ந்த வெங்கடேசன்(34) என்பவர் இன்னும் நிலப் பிரச்சனை முடியாத நிலையில் இங்கு எப்படி வேலை செய்யலாம்? என வேல்முருகனிடம் தகராறு செய்துள்ளார். மேலும் தான் மத்திய அரசு ஊழியர் என கூறி வெங்கடேசன் வேல்முருகனை மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து சின்னசேலம் காவல் நிலையத்தில் வேல்முருகன் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வெங்கடேசனை பிடித்து விசாரித்த போது அவர் மத்திய அரசு ஊழியர் எனக் கூறி ஏமாற்றியது தெரியவந்தது. மேலும் இரண்டு கார்களில் “கவர்மெண்ட் ஆப் இந்தியா” என்று ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டு வெங்கடேசன் வலம் வந்துள்ளார். இதனால் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.