மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது, அகவிலைப்படியானது அடுத்த வருடம் அதிகரிக்கப்படும். எனினும் அது எப்படி கணக்கிடப்படும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது முக்கிய ஆகும். ஏனென்றால் புது வருடத்தில், புதிய பார்முலா வாயிலாக அகவிலைப்படி கணக்கிடப்படும். இது தவிர்த்து மத்திய அரசு ஊழியர்கள் பெற்ற டிஏ உயர்வுக்கு வரியும் செலுத்தவேண்டும்.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அகவிலைப்படி குறித்த கணக்கீட்டு சூத்திரத்தை மாற்றியுள்ளது. இதற்கிடையில் அகவிலைப்படி முழு வரிக்கு உட்பட்டது ஆகும். இந்தியாவிலுள்ள வருமான வரி விதிகளின் கீழ் அகவிலைப்படி குறித்த தனித் தகவல் வருமான வரிக்கணக்கில் கொடுக்கப்பட வேண்டும். அகவிலைப்படியின் பெயரில் நீங்கள் பெறும் தொகைக்கு வரி செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.