Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம், கிராஜுவிட்டி பற்றி…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் பண்டிகைக்கு போனஸ் ஆகியவற்றை வழங்கி அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்தது. இந்த சூழ்நிலையில் இப்போது மத்திய அரசு, ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விதித்திருக்கிறது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் அலட்சியமாக இன்றி கவனமாக பணியாற்ற வேண்டும் எனவும் அவ்வாறு பணிபுரியாதவர்களுக்கு ஓய்வுபெற்ற பிறகு ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி ஆகியவை வழங்கப்படாது எனவும் மத்திய அரசு கடுமையாக எச்சரித்து இருக்கிறது.

இது தொடர்பாக அண்மையில் மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி, அரசு ஊழியர்கள் பணி நேரத்தின்போது ஊழியர்கள் ஏதேனும் தவறுசெய்தாலோ (அ) அலட்சியமாக இருந்தாலோ அவர்கள் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் அவர்களுக்கு ஓய்வூதியம், கிராஜுவிட்டி போன்ற நன்மைகள் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அண்மையில் மத்திய அரசு சிசிஎஸ் விதிகள் 2021ன் விதி 8-ஐ மாற்றியது, அவற்றில் தான் இந்த புது விதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த எச்சரிக்கை அறிவிப்பு மற்றும் விதிமாற்றம் பற்றிய தகவல்கள் அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. இதில் தவறு செய்யும் ஊழியர்களின் பட்டியல் கிடைக்கும் பட்சத்தில் அவர்களின் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுபோல் தவறுசெய்யும் ஊழியர்களின் ஓய்வூதியத்தையும், கிராஜுவிட்டியையும் நிறுத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது.

அத்துடன் ஓய்வுபெறும் ஊழியர் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சகம் (அ) துறையுடன் இணைக்கப்பட்டுள்ள செயலாளர்கள் (அ) சிஏஜிக்கு ஆகிய அதிகாரிகளுக்கு ஓய்வூதியம், கிராஜுவிட்டியை நிறுத்த உரிமை உண்டு. பணியின்போது அந்த ஊழியர்கள் மீது துறை (அல்லது) நீதித்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கவேண்டியது அவசியம் ஆகும். அவ்வாறு ஓய்வூதியம், கிராஜுவிட்டி பெறும் ஊழியரின் ஓய்வுக்குபின் அவரது தவறானது நிரூபிக்கப்பட்டால் அவர் பெற்ற தொகையிலிருந்து முழுவதும் (அல்லது) பகுதியளவு திருப்பிபெறப்படும். இறுதி உத்தரவுக்கு முன்பு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனிடமிருந்து பரிந்துரைகளை பெறவேண்டும்.

Categories

Tech |