Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி…. வெளியாகப்போகும் ஹேப்பி நியூஸ்….!!!!

இந்த நவராத்திரியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப் பெரிய செய்தி இருக்கிறது. அதாவது, அகவிலைப்படி உயர்வு பற்றி மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. செப்டம்பர் 30 முதல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் புது அகவிலைப்படி சேர்க்கப்படும். அத்துடன் செப்டம்பர் 28ம் தேதி மத்திய அரசு இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என வட்டாரங்கள் தெரிவிகிறது.

அகவிலைப்படியை 4 % உயர்த்த அரசாங்கம் முடிவுசெய்து இருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கிறது. செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் புது அகவிலைப்படியைச் சேர்த்து ஊதியம் கிடைக்கும். செப்டம்பர் 28ம் தேதி மத்திய அரசு தன் ஊழியர்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இது பற்றி அறிவிக்கும்.

அத்துடன் அதன் அரசாங்க அறிவிப்பு குறிப்பாணையும் அன்று மாலை வெளியிடப்படும். பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மத்திய அரசானது ஊழியர்களுக்கான இந்த அறிவிப்பு வெளியாகும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வுக்குப் பின், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியானது 38 % ஆக உயரும். இந்த உயர்வு ஜூலை 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும்.

மத்திய அரசு ஊழியர்கள் நீண்டநாட்களாக  DA உயர்விற்காக காத்திருந்தனர். மத்திய ஊழியர்களுக்கு 2மாத நிலுவைத்தொகையும் வழங்கப்படும். இந்த நிலுவைத் தொகை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான நிலுவைத்தொகையாக இருக்கும்.  7-வது ஊதியக்குழுவின் படி மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்சம் அடிப்படை சம்பளம் ரூபாய்.18,000 ஆகவும், அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூபாய்.56,900 ஆகவும் இருக்கிறது.

# 38 % DA உயர்வின்படி, ரூபாய்.18,000 அடிப்படை சம்பளத்தில் ஆண்டு டிஏ-வின் மொத்த அதிகரிப்பு ரூபாய்.6840 ஆக இருக்கும்.

# மாத அதிகரிப்பு ரூபாய்.720 ஆக இருக்கும்.

# அதிகபட்சம் அடிப்படை சம்பளமான ரூபாய்.56,900ல், ஆண்டு அகவிலைப்படியின் மொத்த அதிகரிப்பு ரூபாய்.27,312 ஆக இருக்கும்.

# மாதத்துக்கு ரூபாய்.2276 அதிகரிப்பு இருக்கும்.

Categories

Tech |