மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவு தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இது ஜூன் மாதத்தை விட 0.7 புள்ளிகள் அதிகம். இந்நிலையில் வருகிற ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு என்றும் ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளின் படி தெரிய வருகிறது. இதனையடுத்து ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி தொடர்பான அறிவிப்பு நவராத்திரி சமயத்தில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த அகவிலைப்படி 4 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதிய குழுவின் அடிப்படையில் ஜூலை மற்றும் ஜனவரி மாதங்களில் அதாவது வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அதன் பிறகு தற்போது 34 சதவீதம் வரை அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அகவிலை படியானது 38% அதிகரிக்கப்பட்டால் சம்பளமும் உயர வாய்ப்பு இருக்கிறது. மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தரவுகளை ஏஐசிபிஐ ஒவ்வொரு மாத இறுதியில் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.