Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. ரூ.8000 சம்பள உயர்வு?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் கொரோனா முடிந்து தற்போதைய இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் அகலவிலைப்படி உயர்வை எதிர்நோக்கி மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகல விலை படி 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அடுத்து ஜூலை மாதத்தில் அகல விலை படி மேலும் உயர்த்தப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த முறை 5% அகலவிலைப்படி உயரலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இருந்தாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அப்படி ஐந்து சதவீதம் உயர்வு இருந்தால் ஊழியர்களின் அகலவிலைப்படி 39 சதவீதமாக உயரக்கூடும். இந்த அகலவிலைப்படையானது பிட் மெண்ட் காரணி வாயிலாக கணக்கிடப்படுகிறது. பிக்மென்ட் காரணியை உயர்த்தினால் அரசு ஊழியர்களின் சம்பளம் உயரக்கூடும்.

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் 18,000 ரூபாயாக உள்ளது. தற்போது பிட்மென்ட் காரணி உயர்த்தப்பட்டால் குறைந்தபட்ச சம்பளம் 26 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அதாவது 8000 ரூபாய் வரை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். இந்த மாதம் இறுதிக்குள் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று ஊழியர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Categories

Tech |