Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு சக்கபோடு…. பதவி உயர்வுடன் கூடிய சம்பள உயர்வு…. செம ஜாக்பாட் தகவல்…!!

மத்திய அரசு ஊழியர்களின் ஒரு பிரிவினருக்கு பதவி உயர்வுடன் கூடிய சம்பள உயர்வு அளிக்கும்படி 7வது ஊதிய குழு பரிந்துரை செய்துள்ளது.

மத்திய அரசின் இந்தியன் ரயில்வே துறையில் பணியாற்றும் சில குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வுடன் கூடிய சம்பள உயர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆர்பிஎஸ்எஸ் எனப்படும் ரயில்வே வாரிய செயலக ஸ்டெனோகிராஃபர் சேவையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் பணியாற்றும் அதிகாரிகள் அடுத்த கட்ட ரேங்கிருக்கு உயர்த்தப்பட உள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் அவர்களது ஊதியம் 15,000 வரை உயர்த்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவர்களின் ஊதியம் 67 ஆயிரத்து 500 லிருந்து 70 ஆயிரத்து 700 ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் பதவி உயர்வு தொடர்பான ஆவணங்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலால் மத்திய அரசின் ரயில்வே வாரிய ஊழியர்கள் ஆனந்தம் அடைந்துள்ளனர்.

மேலும் இவர்களில் அகவிலைப்படி 11 சதவீதமும் வீட்டு வாடகை படி 5 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதுபோக உரிய ஆவணங்கள் செலுத்திய பிறகு கல்வி படி தொகையும் உயரும் என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் கொரோனா நெருக்கடியால் ஆவணங்கள் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால் குழந்தைகளின் கல்வி படி தற்போது உள்ள அளவே வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி மாதந்தோறும் கல்வி படியாக 2,250 ரூபாய் தற்போது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |