இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக அரசுக்கு நிதிநெருக்கடி நிலவியது. இதன் காரணமாக அரசுக்கு நிலவிய நிதிநெருக்கடியை சரிசெய்ய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் சென்ற வருடம் 31% அகவிலைப்படியை பெற்று வந்தனர். அதன்பின் சென்ற ஏப்ரலில் மீண்டுமாக 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு, இப்போது 34 சதவீதம் அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே அகவிலைப்படி உயர்வானது வருடத்திற்கு இரண்டு முறை வழங்கப்படும். அந்த அடிப்படையில் வரும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி அதிகரிக்கப்பட இருக்கிறது. இதனிடையில் அகவிலைப்படி அதிகரிப்பு AICPகுறியீட்டு எண் மூலம் கணக்கிடப்படும். இவற்றில் சென்ற ஜனவரியில் 125.1 ஆகவும், பிப்ரவரியில் 125 ஆகவும், மார்ச் மாதத்தில் 126 ஆகவும் கணக்கிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் இனிவரும் மாதங்களுக்குரிய அந்த குறியீட்டின்படி அகவிலைப்படி 4 சதவீதமாக உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த வகையில் அரசு ஊழியர்கள் 38 சதவீதம் அகவிலைப்படியை பெறுவார்கள்.
தற்போது அகவிலைப்படி 38 சதவீதம் ஆக உயர்த்தப்பட்டால் அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என தெரிந்து கொள்ளலாம். அதாவது தற்போது ஒரு ஊழியர் ரூபாய் 56,900 அடிப்படையான சம்பளமாக பெறுகிறார் என்றால், அவருக்கு 34 சதவீதத்தின் படி ரூபாய் 19,346 அகவிலைப்படியானது கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 38% அகவிலைப்படியை கணக்கீட்டால், அவருக்குரூபாய்.21,622 வரையிலும் அகவிலைப்படி தொகையானது கிடைக்கும். அந்த அடிப்படையில் மாதத்துக்கு ரூபாய்.2,276 அகவிலைப்படி அதிகரிக்குமென கணக்கிடப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இவருக்கு வருடத்திற்கு ரூபாய் 27,312 வரை மாத சம்பளத்தில் உயர்வு கிடைக்கும்.