அரசு ஊழியரின் மகள் விவாகரத்துப் பெற்றிருந்தாலும் அவர்களின் குடும்பத்திற்கு ஓய்வுதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அவ்வபோது அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. அதாவது அரசு ஊழியர்களுக்கு பணி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் மட்டும் சம்பள உயர்வு 28 சதவீதமாக இருந்து அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி மாநில அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் பென்ஷன் என அடுத்தடுத்து மூன்று முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர்.
அதாவது மத்திய அரசு ஊழியர்களின் மகள் விவாகரத்து பெற்று இருந்தால் அதாவது விதவையாக இருந்தால் அவர்களுக்கும் பென்ஷன் பணம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. குடும்ப ஓய்வூதியத்திற்கு இணைக்கப்பட்ட நாமினி பெயரில் ஓய்வூதியத்தில் மகள் விவாகரத்து பெற்று ஓய்வூதியர் உயிரோடு இருக்கும்போது அந்த விவாகரத்திற்கு விண்ணப்பிக்க பட்டிருந்தால் அந்த மகள் ஓய்வூதியம் பெற தகுதியானவர் என கூறப்பட்டுள்ளது.
மேலும் முந்தைய காலத்தில் ஓய்வூதியம் பெறும் நபர் உயிரோடு இருக்கும்போது விவாகரத்துப் பெற்றிருந்தாலோ அல்லது கணவனை இழந்திருந்தாலோ மட்டுமே ஓய்வூதியம் பெற முடியும். ஆனால் தற்போது விவாகரத்திற்கு விண்ணப்பித்திருந்தால் இந்த ஓய்வூதியத்தை பெறமுடியும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அரசு ஊழியர்களின் மகள் விவாகரத்துப் பெற்றிருந்தாலும் அல்லது கணவரை இழந்து இருந்தாலும் அவர்களுக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அரசாணை ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாகி உள்ளது.