கடந்த 2004 ஜன..1 ஆம் தேதிக்கு பின் அரசுப்பணியில் சேர்ந்துள்ள ஊழியர்களுக்கு மீண்டுமாக பழைய ஓய்வூதியம் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் திட்டமில்லை என மத்தியஅமைச்சர் கூறியுள்ளார். அதாவது மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார்.
சென்ற 2004 ஜனவரி 1க்கு பின் பாதுகாப்பு படைகளை தவிர்த்து இதர மத்திய அரசுப் பணிகளில் சேர்ந்த புதிய பணியாளர்கள் அனைவருக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை 2004 ஜனவரி 1 முதல் செயல்படுத்தியது. ஆகவே 2004 ஜனவரி 1-க்கு பின் மத்தியஅரசு பணியில் சேர்ந்துள்ள ஊழியர்களுக்கு குடிமைப் பணிகள் விதிகள்-1972, பொருந்தாது. ஆகவே அவர்களுக்கு பழைய ஓய்வூதியம் திட்டத்தினை செயல்படுத்தும் எண்ணமானது இல்லை என கூறியுள்ளார்.