நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் தங்களது பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை கோரிக்கை வைத்துள்ளனர். புதிய பென்ஷன் திட்டத்தை நிறுத்தி விட்டு அதிக லாபம் தரும் பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் மத்திய அரசு இதில் பிடிவாதமாக இருந்து வருகிறது. இந்நிலையில் மாநில அரசுகள் ஒவ்வொன்றாக தங்களது ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மூன்று மாநிலங்கள் மட்டும் பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இதனை அடுத்து மத்திய அரசும் இத்திட்டத்தை செயல்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கான எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. இது தொடர்பான பல்வேறு விவாதங்களுக்கு மத்தியில் பழைய பென்ஷன் திட்டம் குறித்து மத்திய அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. மாநிலங்களவையில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சரான பகவத் காரத் அப்படி ஒரு எண்ணம் மத்திய அரசிடம் இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மாநிலங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது குறித்த கேள்விக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் 2022 பிப்ரவரி மாதத்தில் இதற்கான அறிவிப்புகள் வெளியானதாகவும் அடுத்த நிதியாண்டு முதல் இத்திட்டம் அங்கு செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 2004 ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பின் பணியில் சேர்ந்த ஊழியர்கள் அனைவருக்கும் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அரசின் இந்த பதில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.