மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக அகவிலைப்படி நிலுவை தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அகவிலைப்படி நிலுவை தொகைக் குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மத்திய அமைச்சரவை இது குறித்து அடுத்த வாரம் முடிவு எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதோடு மட்டுமில்லாமல் அகவிலைப்படி தொகை உயர்த்தப்பட்டால் அரசு ஊழியர்களுக்கான சம்பளமும் தானாக உயரும். இருப்பினும் DA உயர்வு அமல்படுத்தப்படுமா ? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. ஆனால் 2022-ல் AICPI குறியீட்டின் தரவுகளின் படி DA 3 % அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் சில மத்திய அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து விரைவில் மத்திய அரசு முடிவு எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஆண்டில் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இப்போது 3 % அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்களுக்கு கிடைத்தது என்றால் அவர்களுக்கு மொத்த DA தொகை 34 % ஆக இருக்கும். அதாவது மத்திய அரசு ஊழியர்கள் ரூ,18,000 அடிப்படை சம்பளமாக பெற்றால் அவர்களுக்கு அகவிலைப்படி ரூ.73 ஆயிரத்து 440 ஆக கிடைக்கும்.
இதுகுறித்த கணக்கீடு விவரங்கள் :-
* பணியாளரின் அடிப்படை சம்பளம் – ரூ 18,000
* புதிய DA (34%) – ரூ 6120/மாதம்
DA இதுவரை (31%) – ரூ 5580/மாதம்
* அகவிலைப்படி அதிகரித்தது – 6120- 5580 = ரூ 540/மாதம்
* ஆண்டு ஊதிய உயர்வு – 540X12 = ரூ.6,480
அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு :-
*பணியாளரின் அடிப்படை சம்பளம் – ரூ 56900
* புதிய DA (34%) – ரூ 19346 / மாதம்
DA இதுவரை (31%) – ரூ 17639 / மாதம்
*அகவிலைப்படி அதிகரித்தது 19346-17639 = 1,707 ரூபாய்/மாதம்
*ஆண்டு ஊதிய உயர்வு 1,707 X12 = ரூ 20,484.