மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, 18 மாத நிலுவைத்தொகைக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு பெரிய அப்டேட் வந்திருக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் புது ஆண்டில் கொரோனா தொற்று நோய்களின் போது நிறுத்தப்பட்ட 18 மாத DA நிலுவைத்தொகையை அரசாங்கம் வழங்க வாய்ப்பு உள்ளதாக நம்புகின்றனர்.
இந்த வருடம் பட்ஜெட்டுக்கு பின் அரசு ஊழியர்களின் கணக்கில் இப்பணத்தை வரவு வைக்கும் என்ற நம்பிக்கை இப்போது மேலோங்கி இருக்கிறது. தேசிய கவுன்சில் செயலாளர் சிவகோபால் மிஸ்ரா இதுகுறித்து அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியதாகவும், ஆனால் சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் அத்தொகையை ஊழியர்களுக்கு மீண்டுமாக அளிக்கலாம் என கூறப்பட்டதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.