மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வந்திருக்கிறது. அதாவது, ஊழியர்களின் சம்பளமானது மீண்டும் அதிகரிக்கபோகிறது. அத்துடன் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மீண்டுமாக பெரியளவில் உயர்த்தப் போகிறது. இதுவரையிலும் வந்துள்ள ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவுகளின் அடிப்படையில், புத்தாண்டின் முதல் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 முதல் 5 % வரை அதிகரிப்பு இருக்கக்கூடும். இது தவிர்த்து பிட்மெண்ட் பாக்டர் மற்றும் புது ஊதிய கமிஷன் பற்றியும் புத்தாண்டில் விவாதிக்கப்படலாம்.
அதுமட்டுமின்றி ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வரும் 18 மாதமாக நிலுவைத்தொகை பற்றியும் நல்ல முடிவு வரக்கூடும். புது வருடத்தில் புதிய ஊதியக்குழுவை மீண்டும் கொண்டுவருவது பற்றி அரசு பரிசீலிக்கலாம். எனினும் இது தொடர்பாக இதுவரையிலும் எந்த புதுப்பிப்பும் இல்லை. அத்துடன் புது ஊதியக்குழுவை நடைமுறைபடுத்தும் எந்த யோசனையையும் அரசாங்கம் மறுத்து உள்ளது. மற்றொருபுறம் இதனை கண்டிப்பாக நடைமுறைபடுத்த வேண்டும் என ஊழியர் சங்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.