இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மத்திய அரசு ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்வு அளித்து வருகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அந்தத் தொகையை நோய்த்தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு இரண்டு கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது 31% வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியர்கள் ஆகியோர்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து வீட்டு வாடகை படி உயர்வு குறித்து மத்திய நிதி அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. மேலும் புத்தாண்டு பரிசாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.இதனால் 34% அகவிலைப்படி கிடைக்கும் என்று மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் அரசு ஊழியர்களுக்கான அடிப்படைச் சம்பளம் ரூ.18,000 என்றால் 34% அகவிலைப்படி உயர்வின்படி ரூ.6120 கூடுதலாக கிடைக்கும். அதனைப் போலவே அடிப்படைச் சம்பளம் 54,900 என்றால் 34% அகவிலை உயர்வின் கடி ரூ.19,346 கூடுதல் தொகை அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.