Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3-5% வரை அகவிலைப்படி உயர்வு?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் 18 மாதம் நிலுவையிலுள்ள அகவிலைப்படி பாக்கி மற்றும் பிட்மென்ட் காரணி உயர்வு பற்றிய அறிவிப்புக்காக காத்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பாக நல்லதொரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதாவது, விகிதங்களை அடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு 3-5 % வரை அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்ற செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி நடந்த கூட்டத்தில் 01/07/2022 முதல் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் 12 மாத சராசரி அதிகரிப்பின் படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் தவணையாக 4 % அகவிலைப்படி, அகவிலை நிவாரணம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. 2022 ஆம் வருடம் செப்டம்பர் மாதத்தில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணமானது அதிகரிக்கப்பட்டது.

இதையடுத்து ஊழியர்களுக்கு 18 மாதம் அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்குவது குறித்து பல பேச்சுக்கள் எழுந்தது. தற்போதைய தகவல்களின் படி நிலை-3ல் இருக்கும் ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவைத்தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை மதிப்பிடப்பட்டு உள்ளது. நிலை-13 (அ) நிலை-14க்கு ஊழியர்களின் நிலுவைத்தொகை ரூ.1,44,200 முதல் ரூ.2,15,900 வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டு உள்ளது. எனினும் சில சமயம் அரசு இந்த விகிதத்தை மாற்றி அமைக்கலாம் எனவும் கூறப்படுகிறது..

Categories

Tech |