Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு….!!!!

பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மறுபடியும் நடைமுறைபடுத்த வேண்டுமென்று மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாகவே கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனிடையில் பல்வேறு மாநில அரசுகளானது பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைபடுத்தி வருகிறது. அதன்படி  ராஜஸ்தான் அரசை அடுத்து, பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் கொண்டு வருவதாக அறிவித்து உள்ளது.

அத்துடன் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாநிலத்தில் ஆட்சியமைத்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைபடுத்துவதாக வாக்குறுதி அளித்திருக்கிறது. 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை மோடி அரசு பரிசீலிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

மத்திய அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கை பற்றி சட்ட அமைச்சகத்திடம் ஆலோசனை கேட்டு உள்ளது. இந்த ஓய்வூதிய திட்டத்தினை எந்த துறையில் நடைமுறைபடுத்தலாம் என சட்ட அமைச்சகத்திடம் கேட்கப்பட்டு உள்ளது. எனினும் அமைச்சகம் உறுதியான பதில் எதையும் இதுவரை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |