Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம்… ரூ.49,420 அதிகரிக்கலாம்?…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் மிகப் பெரிய தொகையானது ஊதியமாக கிடைக்கப் போகிறது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான பிட்மென்ட் பேக்டர் காரணி விரைவில் உயர அதிகமான வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நீண்ட தினங்களாக அரசு ஊழியர்கள் பிட்மென்ட் பேக்டரை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். அவர்களது கோரிக்கை பிட்மென்ட் பேக்டரை 2.57 மடங்கிலிருந்து 3.68 மடங்காக அதிகரிக்கவேண்டும் என்பதுதான்.

அரசுஊழியர்கள் கோரிக்கையின் அடிப்படையில் பிட்மென்ட் பேக்டரை உயர்த்தினால் அவர்களது சம்பளத்திலும் மிகப் பெரிய அளவில் மாற்றம் நிகழும். அரசாங்கம் அடுத்த வருடம் யூனியன் பட்ஜெட்டுக்குப் பின், பிட்மென்ட் காரணியை அதிகரிக்கும் முடிவை பரிசீலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்போது அரசாங்கம் பிட்மென்ட் பேக்டரை 3 மடங்கு அதிகரித்தால், அலவன்ஸ்கள் தவிர ஊழியர்களின் சம்பளம் 18,000 X 2.57 = ரூ 46,260 ஆக இருக்கும்.

அதே நேரத்தில் ஊழியர்களின் கோரிக்கைபடி அரசு பிட்மென்ட் பேக்டரை அதிகரித்தால் சம்பளமானது 26000 X 3.68 =ரூ.95,680ஆக இருக்கும். 3 மடங்கு பிட்மென்ட் பேக்டரை அரசாங்கம் ஏற்றுக் கொண்டால், அடிப்படை சம்பளம் ரூபாய் 21000 ஆகவும், அலவன்ஸ்கள் தவிர மொத்த சம்பளம் 21000 X 3 = ரூ 63,000 ஆகவும் இருக்கும்.  7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய ஊழியர்களின் சம்பளத்தை தவிர்த்து அடிப்படை சம்பளம் மற்றும் ஃபிட்மென்ட் பேக்டர் வாயிலாக சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பிட்மென்ட் பேக்டர் அதிகரிக்கும்போது ஊழியர்களின் சம்பளமும் உயரக்கூடும். அகவிலைப்படி, பயணப்படி மற்றும் வீட்டுவாடகை அலவன்ஸ்களுடன் பிட்மென்ட் காரணி 2.57 பெருக்கப்பட்டு சம்பளம் வழங்கப்படுகிறது. அலவன்ஸ்களுடன் மாதாந்திர வருங்கால வைப்புநிதி மற்றும் கிராஜுவிட்டி ஆகியவையும் சேர்த்து சம்பளத்தில் வழங்கப்படுகிறது.

Categories

Tech |