Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரையில் வெளியாகும் அசத்தல் அறிவிப்பு…. என்ன தெரியுமா?…!!!!!

தற்போதைய நிலையில் 7வது ஊதியக்குழுவின் கீழ் 68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியதாரர்களும் சம்பள பலனைப் பெறுகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை அதிகரிக்கப்படுகிறது. அடுத்த அகவிலைப்படி உயர்வு 2023 மார்ச் மாதத்திற்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. வருகிற வருடங்களில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த மத்திய மோடி அரசு ஒரு புது பார்முலாவை கொண்டுவரத் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக முடிவு மேற்கொள்ளப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிரடியாக அதிகரிக்கும்.

அத்துடன் ஓய்வூதியர்களுக்கான பணப்பலன்களும் அதிகரிக்கும். சென்ற 2016ம் வருடம் அப்போதைய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, ஊதியக்குழுவைத் தவிர்த்து ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த புது அளவுகோல் இருக்கவேண்டும் என்று கூறி இருந்தார். அதேபோன்று ஊழியர்களுக்கு புது ஊதியக்குழுவைக் கொண்டு வர நிதியமைச்சகமும் ஒப்புக்கொள்ளவில்லை எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஊழியர்களின் செயல்திறன் படி அவர்களின் சம்பளம் அதிகரிக்கும் அடிப்படையில், அத்தகைய அமைப்பை அரசாங்கம் உருவாக்கப்போவதாகக் கூறப்படுகிறது. அகவிலைப்படி 50 %க்கு மேல் இருந்தால், சம்பளத்தில் தானாக திருத்தம் செய்யும் வகையிலான பணிகள் நடந்து வருவதாகவும், இதற்காக தானியங்கு ஊதிய திருத்த முறை வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புது முறை நடைமுறைக்கு வரும்போது, ஊதியநிலை 1 -5 வரை உள்ள மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 21,000 ரூபாயாக இருக்கும். ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி சம்பளம் வழங்கும் முறையை மாற்றி புது பார்முலாவை 2024ம் வருடத்தில் அமல்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் மத்திய அரசு ஊழியர்களின் பிட்மென்ட் காரணியை அதிகரிப்பது பற்றியும் ஆலோசனைகள் இருக்கிறது. பிட்மென்ட் காரணி அதிகரிக்கப்பட்டால் அரசுக்கு நிதிச் சுமை அதிகமாகவும் வாய்ப்புள்ளது. ஆகையால் இநவ்விஷயத்தில் மத்திய அரசு நன்மை தீமைகள் பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Categories

Tech |