Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.95,000 ஆக அதிகரிப்பு…. அகவிலைப்படி உயர்வு எதிரொலி….!!!!

மத்திய அரசின் 47.14 லட்சம் ஊழியர்களுக்கும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் குறைவான பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தி வைத்துள்ள டிஏ தொகை உயர்வு சமீபத்தில் உயர்த்தி வழங்கப்பட்டது. எனினும், நிலுவை காலத்திற்கான பணம் வழங்கப்படமாட்டாது என்றும், நடப்பு தவணைகளில் அதிகரிக்கப்பட்ட அளவில் அகவிலைப்படி வழங்கப்படும் என்றும், மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதனால் மத்திய அரசு பல ஆயிரம் கோடி அளவிலான பணத்தை சேமித்து வைத்து தொடர்ந்து ஊழியர்களின் கோரிக்கையின் அடிப்படையில் விரைந்து உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனால் கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிஏ உயர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனால் முடிவாக 17% ஆக டிஏ தொகை 11% அதிகரிக்கப்பட்டு 28% ஆக வழங்க மத்திய அரசு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து தற்போதைய தவணைகள் டிஏ உயர்வு 3% அதிகரிக்கப்பட்டு மொத்தம் 31% டிஏ உயர்வானது நவம்பர் மாதம் வந்துள்ளது. அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பின்னர், ஊழியர்களின் சம்பளம் 95,000 ரூபாய் என்ற அளவில் உயரும். அவர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் தரத்திற்கு ஏற்றவாறு அவர்களின் சம்பளம் உயரும்.

மேலும் 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, நிலை 1-ல் உள்ள மத்திய அரசு ஊழியரின் சம்பளம் 18,000 ரூபாய் முதல் 56,900 ரூபாய் வரை இருக்கும். மேலும் டிஏ உயர்வினால் 18,000 ரூபாய் சம்பளம் வாங்கும் மத்திய அரசு ஊழியருக்கு ஆண்டு ஊதிய உயர்வு ரூபாய் 30,240 ஆக இருக்கும். இதனை எவ்வாறு கணக்கீடு செய்வது என்பதை பார்க்கலாம்.

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு:

பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூபாய் 18,000 புதிய அகவிலைப்படி (31%) ரூபாய் 5,580/மாதம் இதுவரை அகவிலைப்படி (17%) ரூபாய் 3,060/ மாதம் எவ்வளவு அகவிலைப்படி அதிகரித்தது 5580-3060 =ரூ 2520/ மாதம்
ஆண்டு சம்பள உயர்வு 2520×12 = ரூ 30,240.

அதிகபட்சம் அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு:

பணியாளரின் அடிப்படை சம்பளம்: ரூ 56,900
புதிய அகவிலைப்படி (31%) ரூ 17,639 / மாதம்
இதுவரை அகவிலைப்படி (17%) ரூ 9673/ மாதம்
எவ்வளவு அகவிலைப்படி அதிகரித்தது
17,639-9,673 = ரூ 7966 / மாதம்
ஆண்டு சம்பள உயர்வு 7,966×12 = ரூ. 95,529.
ஆகவே, 31% அகவிலைப்படி உயர்வு காரணமாக மொத்த ஆண்டு அகவிலைப்படி ரூபாய் 56,900 அடிப்படை சம்பளத்தில் ரூபாய் 211,668. இதனால் ஆண்டுக்கு சம்பளத்தில் ரூபாய் 95,529 அதிகரித்து வழங்கப்படும்.

Categories

Tech |