விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனைத்து கட்சிகளும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பி தமிழக மக்களையும், தமிழ்நாடு சட்டப் பேரவையையும் அவமதித்துள்ளார்.
அவரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இனியும் ஆர்.என். ரவி ஆளுநர் பதவியில் நீடிப்பது முறை அல்ல. எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.