கொரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற 3,855 குழந்தைகள் பி.எம்.கேர் குழந்தைகள் திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மகளிர், மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இராணி நாடாளுமன்ற மேலவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், கொரோனோவில் ஆதரவை இழந்த குழந்தைகளுக்காக பி. எம். கேர்ஸ் குழந்தைகள் என்ற திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 6, 624 மக்கள் ஆதரவு கேட்டு வந்தனர்.
இதில் 3,855 மனுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதிலும் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் இருந்து 1,158மனுக்களும் , உத்தரப் பிரதேசத்தில் இருந்து 768மனுக்களும் , மத்திய பிரதேசத்தில் இருந்து 139மனுக்களும் , மற்றும் தமிழகத்தில் இருந்து 496 மனுக்களும் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.