Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் ரானேவுக்கு சொந்தமான பங்களா…. ” ரூ. 10 லட்சம் அபராதத்துடன் இடிக்க உத்தரவு” மும்பை கோர்ட் அதிரடி….!!!!

மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சராக நாராயணன் ரானே இருக்கிறார். இவர் மும்பையில் உள்ள ஜூகு கடற்கரையில் ஒரு பங்களா கட்டியுள்ளார். இந்த பங்களா கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ளது. இந்த பங்களாவை ஒழுங்கு படுத்த கோரி மாநகராட்சியிடம் மத்திய அமைச்சரின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை மாநகராட்சி நிர்வாகம் மறுத்த நிலையில், 2-வது முறையாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய அமைச்சருக்கு சொந்தமான பங்களாவை மாநகராட்சி நிர்வாகம் அனுமதிக்க முடியாது.

அப்படி அனுமதிப்பது ஒட்டுமொத்தமாக விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களையும் அங்கீகரிப்பது போன்றதாகும். எனவே விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட பங்களாவை 2 வாரத்திற்குள் இடிக்க வேண்டும். அதோடு விதிகளை மீறி பங்களா கட்டிய குற்றத்திற்காக மகாராஷ்டிரா மாநில சட்ட சேவைகள் ஆணையத்திடம் மத்திய அமைச்சர் ரானே 10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் அமைச்சர் ரானே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக கூறி, 6 வாரங்களுக்கு வழக்கை ஒத்தி வைக்குமாறு நீதிபதிகளிடம் கேட்டார். இதனை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Categories

Tech |