சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரித்து 38 சதவிகிதமாக உயர்த்தி உள்ளது. மத்திய அரசின் இந்த அகவிலைப்படையை உயர்த்தும் முடிவால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் நிவாரணம் பெறுகின்றார்கள். இந்த நிலையில் தற்போது அகவிலைப்படி உயர்வின் முக்கிய அம்சங்கள் பற்றி இங்கே காண்போம்.
1. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதத்திற்கு பதிலாக 38 சதவிகிதம் வழங்கப்படும் இந்த உதவித்தொகை அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் இருக்கும் திருத்தப்பட்ட கட்டணம் 2022 ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.
2.ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையின் கீழ் பல்வேறு நிலைகளின் அடிப்படையில் அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட ஊதிய அமைப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது அடிப்படை ஊதியத்தின் சிறப்பு அலவன்ஸ் எதுவும் இல்லை.
3. எந்த ஒரு மத்திய அரசு ஊழியரின் சம்பளத்திலும் அடிப்படை ஊதியம் இன்றியமையாத பகுதியாகும் இது FR9(21) விதியின் கீழ் சம்பளமாக கருதப்படுகிறது.
4. செலவீன துறையின் அறிவிப்பில் அகவிலை படி செலுத்துவதில் 50 பைசா அல்லது அதற்கு மேற்பட்ட தொகை முழு ரூபாயாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைவிட குறைவான தொகையை புறக்கணிக்க முடியும்.
5. தற்போதைய அறிவிப்பின்படி திருத்தப்பட்ட அகவிலை படியின் பலன் பாதுகாப்பு சேவைகளின் சிவில் ஊழியர்களுக்கு கிடைக்கும் இந்த செலவு குறிப்பிட்ட பாதுகாப்பு சேவை மதிப்பீட்டின் கீழ் வரும்.
6. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கில் விரைவில் வரத் தொடங்கும்.