புதுக்கோட்டை மாவட்டத்தில் ரகசியமாக மது விற்ற வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.
அந்த தகவலின் பேரில் போலீசார் அந்தப் பகுதியில் விசாரணை செய்த போது ரகசியமாக மது விற்று கொண்டிருந்த திருமுருகன், அண்ணாத்துரை, செல்வம், ரெங்கராஜன், இளமுருகு ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, மது விற்பனை செய்த 5 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.