ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியிலுள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தவர் சதீஷ்(31). இவர் நடுவீரப்பட்டு ஊராட்சியில் 7வது வார்டு உறுப்பினராக இருந்தார். இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த ஏற்கனவே தன் கணவனை கொலை செய்த லோகேஸ்வரி என்ற எஸ்தர் (45) என்பவர் டாஸ்மாக்கில் இருந்து சரக்கு வாங்கி வந்து வீட்டில் வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளார். இது தொடர்பாக சதீஷ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததோடு, தொடர்ந்து எஸ்தரிடம் இப்பகுதியில் சரக்கு விற்கவேண்டாம் என்று அழுத்தம் கொடுத்துள்ளார்.
இதன் காரணமாக எஸ்தரின் வருமானம் பாதித்து இருக்கிறது. இவற்றில் கடுப்பான எஸ்தர் சதீஷை தனது வீட்டிற்கு அழைத்து சரமாரியாக தலையில் வெட்டி கேட்டிற்கு வெளியே கொண்டுவந்து போட்டுவிட்டு வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகிவிட்டார். இதுபற்றி தகவலறிந்து விரைந்து வந்த சோமங்கலம் காவல்துறையினர் சதீஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யோகேஸ்வரி என்கிற எஸ்தர் ஏற்கனவே விபச்சார தொழில் செய்து வந்ததாகவும், அதன்பிறகு தற்போது மதுவியாபாரம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையில் சதீஷ் திருமணம் ஆகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் யோகேஸ்வரி என்ற எஸ்தரை பிடித்தால் மட்டுமே எத்தனை பேர் சேர்ந்து கொலை செய்தார்கள் என்ற உண்மை வெளிவரும் என்று காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.