Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு ஷாக்!…. நாளை (பிப்.22) டாஸ்மாக் கடைகள் மூடல்…. கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முழுவதும் நேற்று முன்தினம் (பிப்.19) நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்கு பதிவின் போது ஏற்பட்ட சில குளறுபடிகள் காரணமாக இன்று (பிப்.21) ஒரு சில இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதன்படி இன்று 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து நாளை (பிப்.22) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் நாளை (பிப்.22) டாஸ்மாக் கடைகளை மூட என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |