தமிழ்நாட்டில் இன்று முதல் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காலத்தில் அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் போன்று டாஸ்மாக் கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டது. ஆனால் கொரோனா பரவல் குறைந்த பிறகு தலைவர்கள் வழங்கப்பட்டு வந்தன. அந்த வகையில் டாஸ்மாக் கடைகளுக்கும், தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தன.
ஆனால் நேரம் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டு காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில், இனிமேல் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் எனவும், இன்று முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும், டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.