கோவா கடற்கரை பகுதிகளில் மது குடித்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க கோவா சுற்றுலா துறை முடிவு செய்துள்ளது.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 லட்சம் சுற்றுலா பயணிகள் கோவா கடற்கரைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோவா கடற்கரை பகுதிகளில் மது பாட்டில் குவிந்து கிடந்ததை அடுத்து, கடற்கரைகளில் மது குடித்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க கோவா சுற்றுலா துறை முடிவு செய்துள்ளது. மேலும் திருத்தப்பட்ட சட்டத்தை காவல்துறை மூலம் மாநில சுற்றுலாத்துறை அமல்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவா கடற்கரை வரும் சுற்றுலா பயணிகள் அங்கு அசுத்தம் செய்வதால் சுகாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. அதனால் கோவாவின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் இனி சுற்றுலா பயணிகள் இது மாதிரியான செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.