Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மது குடிக்காதீங்க!… காந்தி போல் வேடமணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய குடும்பத்தினர்….!!!!

சென்னை புளியந்தோப்பு குட்டிதம்பிரான் தெருவில் வசித்து வருபவர் நாகராஜன் (55). இவர் மகாத்மாகாந்தியை போல் வேடம் அணிந்து பொதுமக்களிடம் அவரது கொள்கைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா முழுதும் தன் மனைவி, மகள் ஆகியோருடன் நாகராஜன் பயணம் மேற்கொண்டு காந்திகொள்கை பற்றி மக்களிடம் பேசி வருகிறார்.

இந்நிலையில் நேற்று புளியந்தோப்பு கொடுங்கையூர் பகுதியிலுள்ள மதுக்கடை முன் காந்தி வேடம் அணிந்த நாகராஜன் தன் குடும்பத்தினருடன் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அங்குவந்த மதுபிரியவர்களிடம் இருகைகளையும் கூப்பி வணங்கி “மது குடிப்பது உடலுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் கேடு விளைவிக்கும். ஆகவே அதனை தவிர்த்து விடுங்கள்” என கேட்டுக்கொண்டார்.

Categories

Tech |