Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மது அருந்திவிட்டு வாலிபர்கள் செய்த காரியம்… அரசு பேருந்து சேதம்… 2 பேர் கைது…!!

மது அருந்திவிட்டு அரசு பேருந்தை சேதப்படுத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள மாணிக்கம்பாளையத்திலிருந்து கோலாரம் வரை செல்லும் அரசுப் பேருந்து ஒன்று புள்ளாகவுண்டம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்துள்ளது. அப்போது மது போதையில் அங்கு வந்த 3 வாலிபர்கள் திடீரென பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கேட்ட பேருந்து ஓட்டுநர் குமார் என்பவரையும் தாக்கி, பேருந்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தகராறில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றனர். இதனை பார்த்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளனர். அதில் 2 பேரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் புள்ளாகவுண்டம்பட்டி சேர்ந்த வசந்தகுமார், அத்தப்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களை கைது செய்த காவல்துறையினர் தப்பியோடிய சௌந்தர் பிரதீப்பை தேடி வருகின்றனர்.

Categories

Tech |