Categories
மாநில செய்திகள்

மதுரை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 3 மீன்கள் சிலை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!!!!

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் தீரன் திருமுருகன் என்பவர்  பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டின் மூன்றாவது முக்கிய நகரங்களில் ஒன்றாக மதுரை மாநகரம் விளங்குகிறது. மதுரையை சங்க காலத்தில் ஆண்ட பாண்டிய மன்னனின் சின்னமாக மீன்கள் இருந்த காரணத்தினால் அதன் நினைவாக மதுரை ரயில் நிலையத்திற்கு வெளியே 1999 ஆம் வருடம் 3 மீன்கள் கொண்ட சிலை அமைக்கப்பட்டது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு  ரயில் நிலையத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது 15 அடி உயரம் 3 டன் எடை கொண்ட மீன்கள் சிலை நீக்கப்பட்டது.

இதனையடுத்து  வேலைகள் முடிவடைந்து தேசியக்கொடி கம்பங்கள் போன்ற அனைத்தும் பொருத்தப்பட்ட போது மீன்கள் சிலை மட்டும் வைக்கப்படவில்லை. அதன் பின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 2021 ஆம் வருடம் நவம்பர் மாதம் மீன்கள் சிலை வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் தற்போது  வரை ரயில் நிலையம் முன்பாக மீன்கள் சிலை வைக்கப்படவில்லை. பாண்டிய மன்னர்களை நினைவு கூறும் விதமாக ரயில் நிலையத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த அந்த 3 மீன்கள் கொண்ட சிலையை மறுபடியும் அதே இடத்தில் வைக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்திய நாராயண பிரசாந்த் முன்பாக விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் வழக்கு பற்றி தமிழ்நாடு பொதுப்பணித்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் போன்றோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.

Categories

Tech |