கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மதுரை மாவட்டத்திலும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்ததன் விளைவாக, அதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களை போல மதுரையிலும் முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாளை நள்ளிரவு 12 மணி முதல் 30ம் தேதி வரை 12 மணி வரை இந்த முழு ஊரடங்கானது அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் அதிகம் கொரோனா பாதித்த பகுதியாக உள்ள மாநகராட்சி 100 வார்டுகள், மதுரை கிழக்கு , மேற்கு ஊராட்சி ஒன்றியம் , பரவை பேரூராட்சி, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் இந்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.