மதுரை மாவட்டத்தில் டீ, காபி விலை உயர்வதாக வர்த்தக சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுவாக ஒரு கிளாஸ் டீ விலை பத்து ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்ந்திருப்பதால் நடுத்தர மக்களை கவலையடைய செய்திருக்கின்றது. மேலும் பால் விலை, டீத்தூள், காபித்தூள், சர்க்கரை போன்றவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஆவின் பால் விலை உயர்வு எதிரொலியாக மதுரை மாவட்ட காபி, டீ வர்த்தக சங்கம் டீ, காபி விலையை 15 ரூபாயாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.