தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதை அடுத்து இன்று ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று 30 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும். இந்த மாதம் இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்திய இலங்கை தமிழக அரசு அடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் மதுரை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் இன்று நடைபெறும் ஐந்தாம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு அளிக்கப்படும். அதில் முதல் பரிசாக வாஷிங் மெஷின் இரண்டாம் பரிசாக இரண்டு நபர்களுக்கு ஆண்ட்ராய்ட் போன் மற்றும் மூன்றாவது பரிசாக 10 நபர்களுக்கு பிரஷர் குக்கர் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் சிறப்பு பரிசாக 30 நபர்களுக்கு சேலை சேலை மற்றும் வேட்டி பரிசாக வழங்கப்படும் என்று மதுரை மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனைப் போலவே ஊரகப் பகுதிகளில் தடுப்பு சேர்த்துக் கொள்பவர்களுக்கு சைக்கிள், மெக்சிகோ போன்ற பொருட்களை பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.