மதுரை மக்களுக்கு அமைச்சர் சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 18-ம் தேதி அன்று தொடங்கியுள்ளது. அப்போது 2022-2023- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அன்றைய தினமே தாக்கல் செய்தார். இதையடுத்து மறுநாள் வேளாண்துறை துறைக்கு தனி பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மார்ச் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டமானது நிறைவடைந்தது. இந்நிலையில், மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி, தற்போது நடந்து வருகிறது. எனவே ஒவ்வொரு நாளும் துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வரும் நிலையில், அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் விவாதத்துக்கு பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலன் மானியக்கோரிக்கை மீதான விவாதமானது நடைபெற்றுள்ளது. இந்நிலையில், தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளி உள்ளிட்ட பண்டிகையை தொடர்ந்து 13, 14, 15 மற்றும் 16 என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, நேற்று திங்கட்கிழமை அன்று வருவாய் பேரிடர் துறை மீதான விவாதமானது நடைபெற்றது.