மதுரையில் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள பிரபல தனியார் கட்டுமான நிறுவனங்களான ஜெய பாரத் சிட்டி, கிரீன் சிட்டி, அன்னை பாரத், கிளாட்வே போன்ற நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகள் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். எந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் இந்த சோதனையின் முக்கிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்ற படலாம் என தெரிவிக்கப்படுகிறது.