Categories
மாநில செய்திகள்

மதுரை-நத்தம் மேம்பாலம் விபத்து…. முழு விசாரணை வேண்டும்…. சு.வெங்கடேசன் எம்பி…!!!

மதுரை -நத்தம் சாலையில் மதுரை செட்டிகுளம் இடையே 7.3 கிலோ மீட்டர் தொலைவில் 600 கோடி ரூபாய் செலவில் கடந்த இரண்டு வருடங்களாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.  இந்நிலையில் இன்று மாலை இந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியதில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த  வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இதையடுத்து தீயணைப்பு துறையினர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என 40க்கும் மேற்பட்டவர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை நேரில் ஆய்வு செய்த நிதியமைச்சர் எம் டி ஆர் பழனிவேல் தியாகராஜன், இந்த விபத்திற்கு ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம் என்று  தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த மதுரை மேம்பாலம் விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |