பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததால் வழக்கம் போல் மதுரை- செங்கோட்டைக்கு தினசரி பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது ..
மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு தினசரி பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதில் மதுரையில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் பயணிகளின் இரயில் ( வண்டி எண் : 56734,56735 ) இரு மார்க்கங்களில் கடந்த 13 -ந் தேதியில் இருந்து தண்டவாள பராமரிப்பு பணிக்காக விருதுநகருடன் ரத்துசெய்யப்பட்டது .மேலும் இம்மாற்றம் 31- ந் தேதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அப்பகுதி தண்டவாள பராமரிப்பு பணிகள் முடிவடைந்து விட்டதால் ,(27.7.19) இன்று முதல் செங்கோட்டை தினசரி பயணிகள் ரயில்கள் இரு மார்க்கங்களிலும் மதுரை இரயில் நிலையம் வரை இயக்கப்படும் என்று மதுரை இரயில்வே கோட்ட இயக்கப்பிரிவு தெரிவித்துள்ளது .