மதுரை ஆதீனம் உடல்நலக்குறைவால் காலமானார். துரை ஆதீனத்திற்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு அவர் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் 77 வயதில் காலமானார்.
இந்நிலையில் மதுரை ஆதினம் மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆன்மீகப் பணியிலும் மக்கள் பணியிலும் அருந்தொண்டாற்றி அனைவரின் அன்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த மதுரை ஆதீனம் திரு. அருணகிரிநாதர் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து துயருற்றேன். அன்னாரது மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.