Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி…. “இறகுப்பந்து போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை”….!!!!

மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மதுரை மாவட்டத்திலுள்ள அவ்வை மாநகராட்சிக்கு உட்பட்ட பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஜெர்லின் அனிகா என்ற மாணவி 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் பிரேசிலில் நடந்துவரும் ஒலிம்பிக்கில் இறகுப்பந்து போட்டியில் இந்திய அணி சார்பாக பங்கேற்று ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். கலப்பு இரட்டையர் பிரிவில் ஒரு தங்கப்பதக்கமும் இறகுப்பந்து குழு போட்டியில் பங்கேற்று ஒரு தங்கப் பதக்கமும் வென்று இருக்கின்றார்.

தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த ஜெர்லின் அனிகாவை மதுரை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், மேயர் இந்திராணி உள்ளிட்டோர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இவர் சென்ற 2018 ஆம் வருடம் ஆசியா பசிபிக் இறகு பந்து போட்டியானது மலேசியாவில் நடைபெற்ற பொழுது இரண்டு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கம் பெற்றுள்ளார். மேலும் சென்ற 2019ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற இரண்டாவது உலக இறகுப்பந்தாட்டம் சாம்பியன்ஷிப் தொடர் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார்.

Categories

Tech |