Categories
மாநில செய்திகள்

மதுரையில் பிரம்மாண்ட கலைஞர் நூலகம்…. ஜனவரி 12-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்….!!!!

மதுரையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் பிரம்மாண்டமான நூலகம் அமைய உள்ளது. இந்த நூலகத்தில் 250 கார்கள் நிறுத்தும் வகையில் கீழ்த்தளம் அமைக்கப்டுகிறது. நூலக வளாகத்தில் 300 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் வசதி செய்யப்படுகிறது. அதன்மேல் தரைத்தளம் மற்றும் 6 மாடிகள் உள்பட 7 மாடிகளுடன் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நூலகம் கட்டப்படுகிறது. மின்சார பயன்பாடு குறைவு உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில் நுட்பத்துடன் இந்த கட்டிடம் 12 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட உள்ளது.

2.6 ஏக்கர் நிலப்பரப்பில் 2 ஏக்கரில் கட்டிடம் கட்டப்படுகிறது. கட்டிடத்தில் 250 மற்றும் 200 பேர் அமரும் வகையில் 2 கூட்ட அறைகள் அமைக்கப்படுகிறது. நூலகத்தில் தமிழ் பிரிவு, ஆங்கில பிரிவு, கலைஞர் பிரிவு மற்றும் குடிமைப்பணிகள் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான பிரிவு உள்ளிட்ட 27 பிரிவுகளுக்கு தனித்தனி அறைகள் கட்டப்படுகிறது. 7 மாடியிலும் குளிர்சாதன வசதிகளும் செய்யப்படுகிறது. இந்நிலையில் மதுரையில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கு ஜனவரி 12-ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

Categories

Tech |