மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இன்று காலையில் கடுமையான வெப்பம் இருந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் மாலை 5 மணியளவில் கருமேகங்கள் ஒன்று திரண்டு திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் தாழ்வான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோல் நகரின் முக்கிய வீதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் பெரியார் பஸ் நிலையம், காளவாசல், கோரிப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
Categories
மதுரையில் கொட்டி தீர்த்த கனமழை….. கடும் போக்குவரத்து நெரிசல்….. அவுதிப்பட மக்கள்…..!!!!
