Categories
மாநில செய்திகள்

மதுரையில் இன்று (ஜூன் 10) மின்தடை ஏற்படும் பகுதிகள்….வெளியான அறிவிப்பு….!!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் இன்று (ஜூன் 10) பராமரிப்பு பணியின் காரணமாக மின் நிறுத்தம் செய்யபோவதாக , அந்தந்த பகுதிகளின் மின்வாரிய செயற்பொறியாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும் எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப் படும் என்ற விவரத்தையும் தெளிவாக வெளியிட்டுள்ளனர்.

அதன்படி மதுரை மாவட்டத்தில் இன்று சமயநல்லூர், ஆனையூர் மற்றும் மதுரை பெருநகர் கோவில் துணை மின் நிலையங்களில் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், அந்தப் பகுதியை சுற்றியுள்ள இடங்களில், மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும் எந்தெந்த பகுதிகள் குறித்த விவரம் கீழே  தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சரவணா நகர், பாலாஜி பவர் ஹவுஸ், மகாகணபதி நகர், அன்னை மீனாட்சி நகர், எஸ்.எஸ்.மகால், வித்ய வாகினி அபார்ட்மெண்ட், ஆகாஷ் கிளப் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10-மணி முதல் மதியம் 2-மணி வரை மின் விநியோகம் இருக்காது என சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுக ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் சங்கீத்நகர், சஞ்சீவி நகர், ஆனையூர் மெயின் ரோடு, செல்லையா நகர் 1-வது தெரு முதல் 4-வது தெரு வரை, குட்செட்தெரு, அன்புநகர், அசோக் நகர், அப்பாத்துரை நகர் 1-வது தெரு, மல்லிகை நகர், ஆபீசர் டவுன், சிலையனேரி, வைகை அப்பார்ட்மெண்ட், பிரசன்னா காலனி, கூடல்புதூர், கருப்பசாமி நகர், இந்திரா நகர், ஜானகி நகர் 2-வது தெரு போன்ற இடங்களில் காலை 10-மணி முதல் மதியம் 2-மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அரசரடி மின்வாரிய செயற்பொறியாளர் பழனி தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து கீழமாசி வீதி, கீழ ஆவணி மூல வீதி, தாசில்தார் பள்ளி வாசல் தெரு, தளவாய் தெரு, வெங்கலக்கடைத்தெரு, சாமி சன்னதி, கீழவடம் போக்கித்தெரு, கீழ பெருமாள் மேஸ்திரி வீதி, கொத்தவால் சாவடி, ஜடாமுனீஸ்வரர் கோவில் தெரு, ஆதிமூலம் பிள்ளை சந்து போன்ற இடங்களில் இன்று காலை 10-மணி முதல் மதியம் 2-மணி வரை மின் தடை செய்யபடுகிறது. இவ்வாறு மதுரை பெருநகர் மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |