லாரி சக்கரத்தில் சிக்கி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் அடுத்த ஜெயராம் நகரில் ஞானபிரகாஷ்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் கருவேப்பிலை வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஞானபிரகாஷ் தனது நண்பரான அஜித் என்பவருடன் சிக்கராயபுரத்தில் இருக்கும் கல்குவாரியில் குளித்துவிட்டு மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் மாங்காடு அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர்.
அப்போது பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி ஞானபிரகாஷின் மீது ஏறி இறங்கியதால் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து படுகாயமடைந்த அஜித்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.