Categories
தேசிய செய்திகள்

மதுபோதையில் ஃபியூஸை பிடுங்கிய ஆசாமி….. 1½ மணி நேரம் இருட்டில் தவித்த மக்கள்…..!!!!

கேரளாவின் இடுக்கி அடுத்த வெள்ளியாமட்டம் பகுதியில் மது போதையில் இருந்த நபர் ஒருவர் அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து ஃபியூஸை பிடுங்கி சென்றதால் மக்கள் ஒன்றரை மணி நேரம் கரண்ட் இல்லாமல் இருட்டில் தவித்தனர். நேற்றைய தினம் மாலை 6.30 மணியளவில் மது போதையில் இருந்த ஷாஜி என்ற நபர் அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து பிடுங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து ஊர் மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க, அவர்கள் ஷாஜி வீட்டிற்குச் சென்று ஃபியூஸை கேட்டு தகராறில் ஈடுபட்டனர். ஆனால் எதற்கும் அசராமல் குடிபோதையில் இருந்த அவர் ஊழியர்களைத் திணறடித்துள்ளார்.

இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் ஷாஜியை சமாதானம் செய்து அவரிடமிருந்து ஃபியூஸை வாங்கி மின்வாரிய ஊழியர்களிடம் கொடுத்தனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் ஒன்றரை மணிக்கு மேலாக மின் விநியோகம் தடைப்பட்டது.  பொதுமக்கள் யாரும் புகார் அவர் மீது புகார் தெரிவிக்காததால் வழக்குப்பதிவு செய்யவில்லை.

Categories

Tech |