நீலகிரியில் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்..
தமிழகத்தில் கொரோனா 2ஆவது அலையை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கொரோனா 2ஆவது அலை சற்று குறைந்தாலும், 3ஆவது அலைக்கு தயாராக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. இதற்கிடையே அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அரசு மக்களிடம் வலியுறுத்தி வருகின்றது.. மாவட்ட நிர்வாகமும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.. அதன்படி மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.. ஆனால் ஒரு சிலர் தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர்..
இந்த நிலையில் தடுப்பூசி போடுவதற்காக நீலகிரியில் மாவட்ட ஆட்சியர் ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.. அதாவது, நீலகிரியில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அரசு டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்கும் சான்று, ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே இனி மது விற்பனை செய்யப்படும் என்று ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்..